எங்களை பற்றி

அல்மின்மா சொலுசன்சில் நாங்கள் நம்புவது என்னவென்றால் உங்களது இணையதளமானது வாடிக்கையாளர்களுக்கு உங்கள் பொருட்களையும் சேவைகளையும் பெறுவதற்கு ஓர் நுழைவாயிலாக இருக்கும் என்பதுதான். நிறுவனத்தின் தோற்றுருவை எடுத்து காட்டுவதில் உங்கள் நிறுவனத்தின் இணையதளம் முக்கிய பங்கு வகிக்கும். இது பல வாடிக்கையாளர்களின் ஆன்லைன் தொடர்பிற்கு முதல் படியாக இருக்கின்றது. வாங்குவது முதல் விற்பது வரையிலான முக்கிய பரிமாற்றங்களின் தளமாக உங்கள் இணையதளத்தை நீங்கள் மாற்றியமைக்கலாம். நீங்கள் சிறந்த மற்றும் கவரத்தக்க இணையதள வடிவமைப்பை வைத்திருப்பது உங்கள் போட்டியாளர்கள் மத்தியில் உங்களுக்கு கூடுதல் நன்மையை அளிக்கும். இன்டர்நெட் வாயிலாக இந்த உலகத்தை சென்றடைய சிறந்த தளத்தை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் வழங்குகின்றோம். அல்மின்மா சொலுசன்ஸ் ஆகிய நாங்கள் போட்டியாளர்களை எதிர்கொள்ள மிகச் சிறந்த வடிவமைப்பை ஏற்படுத்தி கொடுப்போம்.

இணையதள உருவாக்கல் மற்றும் பராமரித்தல் அதிகமாக செலவாகும் என்று பலர் நினைக்கின்றனர். குறிப்பாக சிறு தொழில் வணிக நிறுவனங்களிடையே இவ்வாறான கருத்து நிலவி வருகின்றது. ஆனால் நாங்கள் உங்கள் பட்ஜெட் உட்பட்ட தரமான சேவையை வழங்குவோம் என்று உத்திரவாதம் அளிக்கின்றோம். எங்களது சேவை வாயிலாக உங்களுக்கு ஏற்ற இணையதளத்தை உருவாக்கி அதன் மூலம் உங்கள் வணிகத்தை பெருமளவில் உயர்த்தி காட்டுவோம்.

நாங்கள் உங்களுக்கு வழங்க ஏராளமான சேவைகளை வைத்துள்ளோம். அதில் வெப் டெவலபிங், வெப் ஹோஸ்டிங், டொமைன் ரெஜிஸ்டர், விபிஎஸ் ஹோஸ்டிங், ஈமெயில் ஹோஸ்டிங், டெடிகேடட் சர்வர்ஸ், சைட் லாக் மற்றும் செக்யூர் எஸ்எஸ்எல் போன்றவை அடங்கும்.

மேற்கூறிய சேவைகள் மட்டுமல்லாது நீங்கள் மொபைல் ஆப்ஸ் (ஆண்ட்ராயிட், ஐபோன், டாப்லட்ஸ், ப்ளாக்பெர்ரி, விண்டோஸ்போன் மற்றும் விண்டோஸ் 8 ஆப்ஸ் ஆகியவைகளும் கையாளுகின்றோம்.

எங்கள் அல்மின்மா சொலுசன்ஸ் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், தனது சேவைகளை ஆங்கிலத்தில் வழங்குவதோடு மட்டுமல்லாது தமிழ் மொழியிலும் வழங்குகின்றது.

விளம்பரம்

web adminநாங்கள்