தனியுரிமை கொள்கை

அல்மின்மா சொலுசன் தனியுரிமை கொள்கை

அல்மின்மா சொலுசன் தனியுரிமையை முக்கியமான ஒன்றாக நாங்கள் அடையாளம் கொள்கின்றோம். இந்த தனிக்கொள்கையானது நாங்கள் வழங்கும் எல்லா பொருள்களுக்கும் சேவைகளுக்கும் பொருந்தும்.

தகவல் சேகரிப்பு

நீங்கள் எங்களிடம் பதிவு செய்யும் பொழுதும், எங்கள் பொருட்களை மற்றும் சேவைகளை பயன்படுத்தும் பொழுதும் எங்கள் கூட்டாளிகளின் இணையதளத்தை பயன்படுதும் பொழுதும் நாங்கள் பல்வேறு தகவல்களை சேகரிக்கின்றோம். எங்கள் இதர கூட்டாளிகள் அல்லது இதர நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட உங்கள் தகவல்களை நாங்கள் ஒன்றாக இணைப்போம். இதனை நாங்கள் உங்களுக்கு சிறந்த அனுபவத்தை அளிப்பதற்கோ அல்லது எங்கள் சேவைகளை தரத்தை மேம்படுத்துவதற்காகவோ பயன்படுத்துவோம். நாங்கள் உங்கள் கணினி மற்றும் வெப் பிரவுசரில் இருந்து தகவல்களை தானாகவே பெறப்பட்டு பதிவு செய்வோம். உங்கள் ஐபி அட்ரஸ், எங்கள் குக்கி தகவல், மென்பொருள் வன்பொருள் பண்புகள், நீங்கள் வேண்டும் இணையதள பக்கம் மற்றும் இதர பிரவுசர் அளவுருக்கள் போன்றவை இதில் அடங்கும்.

நீங்கள் எங்கள் சேவைகளை பயன்படுத்தும் பொழுது நாங்கள் உங்களுக்கு ஒன்று அல்லது அதற்கும் மேலான குக்கீஸ்சை – எழுத்து கோர்வை கொண்ட ஒரு பைல் – பிரவுசரை அடையாளம் கொள்ள உங்கள் கருவிக்கு அனுப்புவோம். எங்கள் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், பயனர் விருப்பங்களை சேமித்து வைக்கவும், பயனர் டிரெண்ட் கண்காணிக்கவும், உங்களுக்கு சிறந்த அனுபவத்தை அளிக்கவும் நாங்கள் குக்கிசை பயன்படுத்துகின்றோம். நீங்கள் எங்கள் சேவைகளை பயன்படுத்தும் பொழுதும் அல்லது எங்கள் கூட்டாளிகளின் சேவைகளை பயன்படுத்தும் பொழுதும் நாங்கள் ஒன்றோ அல்லது அதற்கும் மேலான குக்கீஸ்சை உங்களுக்கு தருவோம்.எங்கள் சேவைகள் வழியாக நீங்கள் அனுப்பும் செய்திகள், உள்ளடக்கங்களை வெளியிடவும், பொருட்களை வெளியிடவும், தகவல்களை பரிமாறவும் மற்றும் மின்னஞ்சல் ஆகியவற்றை அதே வரிசைப்படி உங்கள் விசாரணை முறைகளை தக்கவைக்கவும், உங்கள் வேண்டுகோள்களுக்கு பதிலளிக்கவும், எங்கள் சேவைகளை மேம்படுத்தவும் இதனை பயன்படுத்துகின்றோம்.

எங்கள் வடிவமைப்பில் எங்களாலும் எங்கள் கூட்டாளிகளாலும் இயக்கப்பட்டு வரும் பல்வேறு தகவல் மையங்களில் வைக்கப்பட்டிருக்கும் சர்வர்கள் உள்ளது.

தகவல் பயன்பாடு

இந்த தனிக் கொள்கையில் விளக்கப்பட்டிருக்கும் காரணங்களுக்காக மட்டுமே உங்கள் தனிப்பட்ட விவரங்களை பயன்படுத்துவோம்.

மேலே குறிப்பிட்டுள்ளவைகளுடன் கூடுதலாக:

 • உங்களை தொடர்பு கொள்ளுதல்
 • ஒரே தகவலை மீண்டும் செலுத்தவேண்டியை நீக்கி, இணையதளங்களையும் சேவைகளையும் எளிதாக்கல்
 • எங்கள் சேவைகளை வழங்குதல்
 • எங்கள் சேவைகளை மேம்படுத்தி, பராமரித்து பாதுகாக்க சோதித்தல், ஆராய்தல், மற்றும் பகுப்பாய்தல்
 • எங்கள் நெட்வர்கின் தொழில்நுட்ப செயல்பாடுகளை உறுதி செய்தல்
 • எங்கள் மற்றும் எங்கள் பயனர்களின் உரிமை அல்லது சொத்துகளை பாதுகாத்தல்
 • புதிய சேவைகளை வடிவமைத்தல்

எங்களது ஒவ்வொரு சேவைகளில் இருக்கும் டெர்ம்ஸ் ஆப்சர்விஸ்சில் குறிப்பிட்டுள்ளவைகள்.

ஸ்பாம் இல்லா கொள்கை

எங்களிடம் கண்டிப்பான நோ-ஸ்பாம் கொள்கை உள்ளது. இது ஏதேனும் தகவல்களை ஸ்பாமாக அனுப்புவதை தடுக்கின்றது. நாங்கள் மூன்றாம் தரப்பினர்களுக்கு எந்த தொடர்பு விவரங்களையும் அளிக்க மாட்டோம்.

தனிப்பட்ட தகவல்களின் தேர்வுகள்

பதிவு தேவைப்படும் குறிப்பிட்ட சேவைகளில் நீங்கள் பதிவு செய்யும்போது, நாங்கள் உங்களிடம் தனிப்பட்ட விவரங்களை வழங்கச் சொல்லி கேட்போம்.இந்த தனிக்கொள்கையில் மற்றும் எங்களது டெர்ம்ஸ் ஆப் செர்விஸ்சில் விளக்கப்பட்டிருக்கும் கூறுகள் தவிர்த்த வேறு எந்த முறையில் உங்களது தகவல்களை நாங்கள் பயன்படுத்த நினைத்தால், அவ்வாறு பயன்படுத்தும் முன்னரே உங்களிடம் ஒப்புதல் அளிக்க விண்ணப்பிப்போம். எல்லா ப்ரவுசர்களும் குக்கீஸ்சை அக்செப்ட் செய்து கொள்ளும் படி முன் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த குக்கீஸ்சை மறுக்க நீங்கள் உங்கள் பிரவுசரை மாற்றி அமைத்து கொள்ளலாம்.எனினும்,உங்கள் குக்கீஸ் டிஸ் அபில்ட்டாக இருந்தால் எங்களது சில அம்சங்களும் சேவைகளும் ஒழுங்காக செயல்பாடாது. எங்களது எந்த சேவைகளுக்கும் நீங்கள் உங்களது தனிப்பட்ட தகவல்களை தர மறுப்பு தெரிவிக்கலாம். அவ்வாறு இருக்கும் தருணத்தில் எங்களது சேவைகளை உங்களுக்கு வழங்க இயலாது.

தகவல் பரிமாற்றம்

நாங்கள் தனிப்பட்ட தகவல்களை இதர நிறுவனங்கள் அல்லது தனி நபர்களுக்கு பின்வரும் குறிப்பிட்ட சில தருணங்களில் மட்டுமே பகிர்ந்து கொள்வோம்:

 • உங்களிடம் ஒப்புதல் பெறப்பட்ட பின்பு.
 • உங்கள் தனிப்பட்ட தகவல்களை எங்கள் சார்பாக முறைப்படுத்த எங்கள் துணைகள், இணை நிறுவனங்கள் மற்றும் சில நம்பகமான நிறுவனங்கள் அல்லது நபர்கள் உடன் பகிர்தல்.
 • இந்த தரப்பினர்கள் எங்களது இந்த தனிக்கொள்கைக்கு சம்மதித்து,இதர நம்பத்தன்மை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இணங்கிய பிறகு மட்டுமே உங்கள் தகவல்களை முறைப்படுத்துவதற்கு அனுமதிப்போம்.

இத்தகைய தகல்வல்களை நாங்கள் பயன்படுத்தவும், பாதுக்காக்கவும் பின்வரும் நல்வழிகளை சார்ந்தே இருக்கும்:

 • பொருந்தக்கூடிய சட்டம், கட்டுப்பாடு, சட்ட செயலாக்கம் அல்லது அமல்படுத்தப்பட அரசு கோரிக்கையை பூர்த்தி செய்வது.
 • இதன் சாத்திய மீறல் விசாரணை உள்பட, பொருந்தும் சேவை விதிமுறைகளை செயலாக்குதல்,
 • மோசடிகளை கண்டறிதல், தடுத்தல், அல்லது தெரிவித்தல், பாதுகாப்பு அல்லது தொழில்நுட்ப சிக்கல்கள்
 • நமது சட்டம் அனுமதிக்கும் எங்களது பயன்கள்,எங்களது அல்லது பொதுவானது போன்றவற்றின் உரிமைகள், பாதுக்கப்பு தீங்கு விளைவிப்பதை தடுத்தல்

நாங்கள் மூன்றாம் தரப்பினரிடம் சில தொகுக்கப்பட்ட, தனிப்பட்ட அல்லாத தகவல்களான பயனர்கள் எண்ணிக்கை போன்றவற்றை பகிர்ந்து கொள்வோம். இத்தகைய தகவல்கள் உங்களின் தனி நபராக அடையாளம் காட்டக்கூடியதாக இருக்காது.

எங்களது ஒவ்வொரு சேவைகளில் இருக்கும் டெர்ம்ஸ் ஆப் சர்விஸ்சில் குறிப்பிட்டுள்ளவைகள்.

தகவல் பாதுகாப்பு

நாங்கள் அங்கீகரிக்கப்படாத அணுகல் அல்லது அங்கீகரிக்கப்படாத மாற்றம், வெளியிடுதல் அல்லது தகவல் அழிவு போன்றவற்றிக்கு எதிராக பாதுகாக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்போம். இதில் எங்கள் தகவல் சேகரிப்பு, சேமிப்பு மற்றும் செயலாக்க நடைமுறைகள் போன்றவற்றின் உள் மீள்பார்வையிடுதல். மற்றும்தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டிருக்கும் அமைப்புகளை அங்கீகரிக்கப்படாத அணுகல் எதிராக பாதுகாக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் அடங்கும்.

நாங்கள் எங்களது ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் முகவர்கள் போன்றவர்களுக்கு மட்டுமே தனிப்பட்ட தகவல்களை அணுக அனுபதி அளித்துள்ளோம். எங்கள் சேவைகளை இயக்குவதற்கும், மேம்படுத்தவும் இந்த தகவல்கள் அவர்களுக்கு தேவைப்படும். இவர்கள் நம்பகத்தன்மை கடமைகளுக்கும் ஒழுக்கத்திற்கு உட்பட்டு, இந்த கடமைகளை மீறினால், பணிநீக்கம் மற்றும் குற்றவியல் வழக்குஉட்படுவார்கள்.

தனிப்பட்ட தகவல் அணுகல் மற்றும் புதுப்பித்தல்

நீங்கள் எங்கள் சேவைகளை உபயோகிக்கும்போது, நாங்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களை அணுகுவதற்கும் தவறான தகவல் இருந்தால் திருத்தங்கள் செய்வதற்கும் அனுமதி அளிக்கின்றோம்.

இணையதள உருவாக்குதலுக்கான தனிக்கொள்கை

இந்த தனிக்கொள்கையானது அல்மின்மா சொலுசன் (இனி “அல்மின்மா” அல்லது ” நாங்கள்” அல்லது “எங்களது” என்று குறிப்பிடப்படும்) நீங்கள் எங்கள் இணைய தளத்தில்கொடுக்கப்படும் எந்த தகவலையும் எவ்வாறு பாதுகாக்கின்றது மற்றும் பயன்படுத்துகின்றது என்பதை தெரிவிக்கின்றது.

உங்கள் தனித்தன்மை பாதுக்காக்கப்படுவதில் Alminma உறுதி அளிக்கின்றது. இந்ததளத்தை பயன்படுத்தும் போது நீங்கள் கொடுக்கும் தகவல்கள் உங்களை அடையாளம் கண்டுகொள்வதற்கும், மேலும் நீங்கள் கொடுக்கும் தகவல்கள் இந்ததனிக்கொள்கையில் சொல்லப்பட்டுள்ள காரணங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதை உறுதி அளிக்கின்றது.

அல்மின்மாவின் இந்த கொள்கையை அவ்வப்போது மாற்றி இந்த பக்கத்தை புதுப்பித்து கொண்டே இருக்கும். நீங்கள் இந்த பக்கத்திற்கு அவ்வப்போது வருகை அளித்து, இந்த மாற்றங்கள் உங்களுக்கு சந்தோஷத்தை அளிக்கின்றதா என உறுதி செய்யுங்கள்.

நாங்கள் சேகரிக்கும் தகவல்கள்

தனிப்பட்ட தகவல்கள் என்பது ஒரு தனிநபரை அடையாளம் கண்டுகொள்ள பயன்படும் தகவல்கள், உதாரணமாக முதல் மற்றும் கடைசி பெயர், ஈ-மெயில் முகவரி, வீட்டு மற்றும்தபால் முகவரி, உங்களின் தொழில், தொழிலகம், தனிப்பட்ட ஆர்வம், சேவை மற்றும் வேறு நடவடிக்கைக்காக பயன்படும் இதர தகவல்கள் ஆகியவை இதில் அடங்கும்.

தகவல் பரிமாற்றம் மற்றும் வெளிப்படுத்தல்

நாங்கள் திரட்டிய தகவல்களை என்ன செய்வோம்?

உங்கள் தேவைகளை புரிந்து, உங்களுக்கு சிறந்த சேவையை அளிக்கவும் பின்வரும் காரணங்களுக்காகவும் இந்த தகவல்கள் எங்களுக்கு தேவைப்படுகின்றது.

 • எங்கள் ஆவண பதிவிற்காக
 • எங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்காக இந்த தகவலை உபயோகிப்போம்.
 • உங்களின் ஈ-மையில் முகவரியை வைத்து உங்களின் ஆர்வத்திற்கு ஏற்ப புதிய பொருள், சிறந்த சலுகை, மற்றும் இதர தகவல்களை அனுப்ப.
 • அவ்வப்போது நாங்கள் இந்த தகவல்களை வணிகஆராய்ச்சி நோக்கத்திற்காகவும் பயன்படுத்துவோம். தொலைப்பேசி, ஈ மெயில், தொலைநகல் மூலமாகவும் நாங்கள் உங்களை தொடர்பு கொள்வோம். உங்களுக்குஏற்றார்போல் உங்களின் இணையதளத்தை வடிவமைத்துக் கொள்ளவும் இந்த தகவல்கள்பயன்படுகின்றன.

பாதுகாப்பு

உங்கள் தகவல் பாதுகாப்பாக இருப்பதை நாங்கள் உறுதி அளிக்கின்றோம். ஆன்லைனில் சேகரிக்கப்படும் உங்களது தகவல்களை அங்கீகாரமற்ற அணுகல், வெளியிடுதலில் இருந்து தடுக்க மற்றும் பாதுகாக்க மின்னணு மற்றும் நிர்வாக வழிமுறைகளை வைத்திருக்கிறோம்.

குக்கீஸ் எவ்வாறு நாங்கள் உபயோகிக்கின்றோம்

குக்கீ என்பது உங்கள் கணினியின் ஹார்டு டிரைவில் இருக்க அனுமதி கேட்கும் ஒரு சிறியகோப்பு ஆகும். அதை ஏற்றுக்கொண்ட பின் அந்த கோப்பு உங்கள் கணினியில்சேர்ந்து நீங்கள் குறிப்பிட்ட இணையதளத்தை பார்வையிடும் பொழுதோ அல்லது வலைப் போக்குவரத்தை பற்றி ஆராயவோ பயன்படுகிறது. வலைப் பயன்பாடுகள் ஒரு தனிநபர் போல உங்களுக்கு பதிலளிக்க குக்கீ பயன்படுகிறது. உங்களிடமிருந்து சேகரிக்கப்படும் தகவல்களின் அடிப்படையில் உங்களின் தேவை, விருப்பு வெறுப்புதொடர்பான தகவல்களை வழங்க தன்னை தயார்படுத்திக் கொள்ளும்.

மற்ற இணையதளங்களின் இணைப்புகள்:

எங்கள் இணையதளங்கள் மற்ற இணைய தளங்களின் இணைப்புகளையும் சில நேரங்களில் கொண்டிருக்கலாம். நீங்கள் அந்த இணைப்புகளின் மூலம் எங்களின் இணையதளத்தை விட்டு வேறு இணையதளத்திற்கு சென்றுவிட்டால் அந்த இணையதளத்தின் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் எங்களிடம் இல்லை. அதனால் அவ்வாறு நீங்கள் தரும் எந்த தகவல்களுக்கும் நாங்கள் பாதுகாப்பு தரவோ பொறுப்பாகவோ முடியாது. மற்ற எந்த இணையதளங்களும் இந்த கொள்கையினால் நிர்வகிக்கப்படுவதில்லை. அந்தந்த இணையதளத்திற்கான தனிக்கொள்கையினை படித்து கவனத்துடன் செயல்பட வேண்டும்.

உங்கள் தனிப்பட்ட தகவல்களின் கட்டுப்பாடு

உங்களது தனிப்பட்ட தகவல்களையும் அதன் பயன்பாடுகளையும் கட்டுப்படுத்த முடியும்.இணையதளத்தில் படிவத்தினை நிரப்பும் போது, நேரடி வணிக நோக்கத்திற்காக உங்கள் தகவல்கள் பயன்படுத்தப்பட வேண்டாம் என்ற பெட்டியைகிளிக் செய்து கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் முன்பே நேரடி வணிக நோக்கத்திற்காக உங்களது தகவல்களை பயன்படுத்தலாம் என்று கொடுத்திருந்தால் இந்த ஈமெயில் ஐடிக்கு contact@alminma.com ஈ மெயில் கொடுப்பதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.

இந்த இணையதளத்தை பயன்படுத்துவதன் மூலமாக நீங்கள் இந்த தனிக்கொள்கை முழுவதையும்மற்றும் எங்களது இணையதளத்தின் டெர்ம்ஸ் ஆப் பாலிசியையும் படித்து, புரிந்து இதற்கு இணங்கி ஒப்புக்கொள்கிறீர்கள். இதன் விதிமுறைகளுக்கு ஒப்புகொள்ளவில்லை என்றால் இந்த பக்கத்தை விட்டுவிட்டு, எங்கள் இணையத்தளத்தை பயன்படுத்தாதீர்கள்.

1. தனிக்கொள்கையின் மாற்றங்கள்

நாங்கள் அவ்வப்போது இந்த கொள்கையை மீள்பார்வை செய்து, இதன் தொடர்புடைய பரவலாகமாற்றங்களை கொண்டுவருவோம். இதில் தரப்பட்ட மாற்றங்கள் உடனடியாக இணையதளத்தில் கொண்டுவரப்படுவதால், இந்த பக்கத்தை தொடர்ந்து மீள்பார்வை செய்வதோடு நீங்கள் பயன்படுத்தும் மென்பொருளானது புதிய வர்ஷனாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

2. தனிப்பட்டஅடையாள தகவல்கள்:

தனிப்பட்ட தகவல்கள் என்பது தனிப்பட்ட முறையில் உங்களை அடையாளம் காட்டக்கூடிய தகவல்கள் என்றும் பொதுவாக இல்லாதது என்பதாகும். நீங்கள் பொருட்கள் வாங்கும்போது அல்லது இணையதளத்தை பயன்படுத்தி பணம் செலுத்தும் போது உங்களால்கொடுக்கப்படும் அல்லது நாங்கள் உங்களிடம் இருந்து சேகரித்த பின்வரும் தனிப்பட்ட தகவல்கள் இதில் அடங்கும். உங்கள் பெயர், வயது, மற்றும் பாலினம்.

புகைப்படம் மற்றும் ஆடை அணிகள அளவு போன்ற உடல் சார்ந்த அடையாளங்கள்.

வீட்டு முகவரி, தொலைப்பேசி எண், ஈ.மெயில், வருமான வரி பேன் எண் போன்ற தகவல்கள்.

எங்களிடம் பதிவு செய்துகொண்ட பயனர்பெயர் மற்றும் பாஸ்வேர்ட்.

நீங்கள் எங்களிடம் ஆர்டர் செய்து பணம் செலுத்த பயன்படும் வங்கித் தகவல்கள்.

உங்கள் தொடர்பு மற்றும் ஷாப்பிங் முன்னுரிமைகள்.

தனிப்பட்ட விவரம் மற்றும் ஆர்வம் (உதாரணமாக புத்தகம், படம், விளையாட்டு)

உங்கள் இனைய உலாவு மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் நடவடிக்கைகள் .

உங்கள் பிறந்த நாள், திருமண நாள் போன்ற முக்கிய நிகழ்வுகள்.

உங்களின் தனிப்பட்ட அடையாள தகவல்களை நாங்கள் வேறு எந்த இணையத்துடனும் பகிர்ந்துகொள்வதில்லை. ஆனால் சில தகவல்களை மட்டும் மூன்றாம் தரப்பு சேவை செய்யும்சில மையங்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டியிருக்கும். உதாரணமாக பொருட்களைஉங்களிடம் வழங்குபவர், தேடல் முடிவுகள் மற்றும் இணைப்புகள் வழங்குவது, கடன்அட்டை கொடுப்பனவுகளை செயல்முறை அளிக்கவும், இணையத்தளம் செயல்படுத்துவதற்கும், பழுதுபார்த்தல், மற்றும் வாடிக்கையாளர் சேவையைவழங்க, மார்க்கெட்டிங் உதவி வழங்கவும், மின்னஞ்சல் அனுப்பவும் பயன்படுத்துகின்றோம்.

3. தனிப்பட்ட அல்லாத அடையாள தகவல்கள்.

தனிப்பட்ட அல்லாத அடையாள தகவல்களில் இவை அடங்கும்.- கணினி அடையாள தகவல்கள்

கணினிக்கு ஒதுக்கப்பட்ட ஐபி முகவரி.

எங்கள் சேவையை அணுக பயன்படுத்தும் டொமைன் சர்வர்.

நீங்கள் பயன்படுத்தும் கணினியின் வகை.

நீங்கள் பயன்படுத்தும் இணைய உலாவியின் வகை.

இந்த தனிப்பட்ட அல்லாத அடையாள தகவல்களை நாங்கள் பங்குதாரர்கள், இணைகள் மற்றும் விளம்பரதாரர்களிடம் கொடுப்பதோ அல்லது பகிர்தலோ செய்யக்கூடும்.அவர்கள் இந்ததனிப்பட்ட அல்லாத அடையாள தகவல்கள் பயன்பாட்டை பின்தொடர்வது அல்லது ஆய்வது , எங்கள் இணைத்தளத்தை நிர்வகிக்கவும் தொடர்ந்து அதன் தரத்தை மேம்படுத்தவும் பயனர்களிடம் இருந்து தொகுதி புள்ளிவிவர தகவல்களை பெறுவது போன்றவற்றை மேற்கொள்ளுவார்கள்.

4. தகவல்களைபுதுப்பித்தல்:

நீங்கள்எங்களிடம் வழங்கிய தனிப்பட்ட அடையாள தகவல்களை நீங்கள் அணுகி மாற்றங்களை மேற்கொள்ளும் வசதி உள்ளது.உங்கள் லாகின் மற்றும் பாஸ்வேர்ட் பயன்படுத்தி உங்கள் தனிப்பட்ட அடையாள தகவல்களை மாற்றிக்கொள்ளலாம். உங்கள் தனிப்பட்ட அடையாள தகவல் மாறினால், நீங்கள் உடனே அதனை புதுபிக்க வேண்டும் என்று நாங்கள் அறிவுரைக்கின்றோம்.

5. மூன்றாம்தரப்பு இணையதளத்தின் தனிக்கொள்கைகள்:

இந்த தனிக்கொள்கையானது, நாங்கள் உங்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் பயன்பாட்டையும் வெளிப்படுத்தலை பற்றி மட்டுமே தெரிவிக்கின்றது. இந்த இணையதளத்தின் வழியாக பயன்படுத்தப்படும் இதர இணையதளங்களுக்கு அவற்றின்தனிக்கொள்கைகள்,தகவல் சேகரிப்பு மற்றும் பயன்பாடு வெளிப்படுத்தல் போன்றவைதனியாக இருக்கும். இவ்வாறு நீங்கள் ஏதேனும் இணையத்தளத்திற்கு சென்றால், நீங்கள் அந்த இணையத்தளத்தின் தனிக்கொள்கைகளை கட்டாயம் படிக்கவேண்டும். ஆகையால், மூன்றாம் தரப்பு இணையதளத்தின் கொள்கைகள் மற்றும் பயன்பாட்டிற்குநாங்கள் பொறுப்பல்ல.

6. விருப்பு/தேவை:

நீங்கள் எங்களிடம் பதிவு செய்த பிறகு எங்களிடம் இருந்தோ அல்லது பங்குதாரர்களிடமிருந்தோ வரும் அவசியமற்ற செய்திகளை இருந்து விலக்குவதற்கான வசதியை நாங்கள் எல்லா பயனர்களுக்கும் வழங்கியுள்ளோம்.

7. எங்களைதொடர்புகொள்ள:

எங்களது தனிக்கொள்கை தொடர்பான கேள்விகளோ அல்லது பரிந்துரைகள் ஏதேனும் உங்களுக்கு இருந்தால், தயவுசெய்து எங்களை Dubai : +971-561118170, contact@alminma.com தொடர்புகொள்ளவும்.

இந்த தனிக்கொள்கையின் மாற்றங்கள்

இந்த தனிக் கொள்கையானது அவ்வப்போது மாறிக்கொண்டு இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நன்றி.

web adminதனியுரிமை கொள்கை